×

நாகப்பட்டினத்தில் 2 மாதங்களில் கடலில் விடப்பட்ட 50,000 ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகள்-வனச்சரகர் தகவல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் 2 மாதங்களில் 50ஆயிரம் ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக வனச்சரகர் தெரிவித்தார்.நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டை கடற்கரையில் வனத்துறை சார்பில் ஆலிவ்ரெட்லி ஆமைகுஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வனச்சரகர் ஆதிலிங்கம் தலைமையில் வனக்காப்பாளர் ராஜேஷ், வேட்டை தடுப்பு காவலர் சசிகுமார், கடல் ஆமை முட்டை சேகரிக்கும் அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் கடலில் ஆமைகுஞ்சுகளை விட்டனர். அப்போது வனச்சரகர் ஆதிலிங்கம் கூறியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஆலிவ்ரெட்லி ஆமைகள் வரும். முட்டைகள் இடும் போது அதை வனத்துறையினர் சேகரித்து பொறிப்பகத்தில் வைத்து குஞ்சுகள் பொறிக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 58 ஆயிரத்து 143 முட்டை சேகரிக்கப்பட்டள்ளது. இதில் 50 ஆயிரம் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 109 குஞ்சுகள் விடப்பட்டது.

நாகப்பட்டினம் வனசரகத்தில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்து 497 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 7 ஆயிரத்து 500 குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. கடலில் வளம் பெருக ஆலிவ்ரெட்லி ஆமைகுஞ்சுகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாகப்பட்டினத்தில் 2 மாதங்களில் கடலில் விடப்பட்ட 50,000 ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகள்-வனச்சரகர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Samanthanpet beach ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...